Thursday 16 June 2011

வனத்துறை எச்சரிக்கை யானைகளுக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை

உடுமலை- மூணாறு ரோட்டில், சுற்றுலாப்பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும், யானைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வனத்துறை சார்பில் குழுஅமைக்கப்பட்டுள்ளது.
அமராவதி மற்றும் உடுமலை வனசரகத்திற்குட்பட்ட புங்கன்ஓடை, காமனூத்து ஓடை, ஏழுமலையான் கோவில் உட்பட பகுதிகளில் யானை, மான் மற்றும் பல அரிய வகை விலங்குகள் உள்ளன. அமராவதி அணை நீர் தேங்கும் பரப்பு மற்றும் நீர் வரத்து ஓடையில் தண்ணீர் குடிப்பதற்காக, யானைகள், மான்கள், காட்டெருமைகள் தினமும் மாலை வேளையில் உடுமலை-மூணாறு ரோட்டை ரோட்டை கடக்கின்றன. இவ்வாறு வந்து செல்லும் வன விலங்குகளுக்கு, அந்த வழியாக செல்வோர் தொல்லை அளிப்பது வாடிக்கையாகி விட்டது. சிலர், விலங்குகளை சீண்டிப்பார்க்கின்றனர். வன ஆர்வலர்கள் கூறுகையில், “வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், சுற்றுலாப்பயணிகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே வனப்பகுதிகளை காக்க முடியும். வன விலங்குகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உடுமலை – மூணாறு ரோட்டில், வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்களை அகற்ற உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் சார்பில், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் பணியில் ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். ரோட்டை கடக்கும் யானைகளுக்கு தொல்லை அளிக்கப்படுகிறதா என கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....