மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் மதியம், மடத்துக்குளம் அருகேயுள்ள சோழமாதேவி அரசு நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு, குழந்தைகள் சிலர் பாதிக்கப்பட்டதாக, இப்பகுதியை சேர்ந்த ஒருவர், “108′ ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார்.
Welcome to www.udumalaiinfo.com
Udumalai also known as Udumalpet is a town and a municipality in Tirupur district, Indian state of Tamil Nadu.Poor Man's Ooty.
Saturday, 25 June 2011
Thursday, 16 June 2011
Saturday, 14 May 2011
சண்முகவேலு வெற்றி பெற்றார்
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., – தி.மு.க., செயலாளர்கள் நேரடியாக தேர்தலில் மோதிய மடத்துக்குளம் தொகுதியில், அமைச்சர் சாமிநாதனை விட, 19,669 ஓட்டுகளை கூடுதலாக பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு வெற்றி பெற்றார்.மடத்துக்குளம் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் சாமிநாதன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகவேலு நேரடியாக போட்டியிட்டனர்.
Monday, 2 May 2011
மே தினம் முன்னிட்டு திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திருமூர்த்திமலையில், மே தினம் மற்றும் விடுமுறை நாளை கொண்டாட நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஆர்வ மிகுதியில் பயணிகள் அணைப்பகுதியில் இறங்கி குடும்பத்துடன் குளித்தனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. நேற்று மே தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்தனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்குரிய அடிப்படை தகுதிகள் ஒன்றும் இல்லை!
பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ள உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.உடுமலையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், தினமும் 15 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் உள்ளதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய அமைப்பு இல்லாமல், ஒரே நீளமாக குறுகியதாக உள்ளதோடு, பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் என ஐந்து வழிகள் அமைந்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)
"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது
மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....

-
பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ள உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ...
-
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர்த்திரு விழா 2011, தேதி, நிகழ்ச்சி, நேரம் பின்வருமறு.
-
உடுமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், 44 ஆயிரத்து 560 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உடுமல...