Saturday 14 May 2011

உடுமலையை கைப்பற்றினார் பொள்ளாச்சி ஜெயராமன்

உடுமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், 44 ஆயிரத்து 560 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உடுமலை சட்டசபை தொகுதியில், 98 ஆயிரத்து 233 ஆண்கள்; 97 ஆயிரத்து 959 பெண்கள் என ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 192 வாக்காளர்கள் உள்ளனர்.
அ.தி.மு.க., வேட்பாளராக, பொள்ளாச்சி ஜெயராமன், கொ.மு.க., வேட்பாளராக இளம்பரிதி உட்பட ஏழு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.மத்திய தேர்தல் பார்வையாளர் விமல் சந்த்ரா , தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயமணி முன்னிலையில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. காலை 8.00 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டன. கொ.மு.க., வேட்பாளர் 493; அ.தி.மு.க.. வேட்பாளர் 129; பா.ஜ.,வேட்பாளர் ஒன்பது என 631 ஓட்டுகள் பதிவாகியிருந்தன.மொத்தம் 19 சுற்றுகள் எண்ணப்பட்டன. பெரும்பாலான சுற்றுகளில் அ.தி.மு.க., 2,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், முதலாவதாக, மதியம் 1.45 மணிக்குள் எண்ணிக்கை முடிந்து, உடுமலை தொகுதி வெற்றி அறிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி ஜெயராமன், கொ.மு.க., வேட்பாளரை காட்டிலும் 44 ஆயிரத்து 560 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்:பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.,) – 95,477இளம்பரிதி (கொ.மு.க.,) – 50,917விஸ்வநாதன் (பா.ஜ.,) – 3,817வெங்கடாசலம் (சுயே.,) – 2,403ஜெயராமன் (சுயே.,) – 1,870மோகன்ராஜ் (சுயே.,) – 1,496வேலுசாமி (பகுஜன் சமாஜ்) – 865

No comments:

Post a Comment

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....