Monday 2 May 2011

மே தினம் முன்னிட்டு திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருமூர்த்திமலையில், மே தினம் மற்றும் விடுமுறை நாளை கொண்டாட நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஆர்வ மிகுதியில் பயணிகள் அணைப்பகுதியில் இறங்கி குடும்பத்துடன் குளித்தனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. நேற்று மே தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்தனர்.
 பஞ்சலிங்க அருவியில் குளித்தும், அமணலிங்கேஸ்வரரை தரிசித்தனர். பின் படகு சவாரி மேற்கொண்டு அணையின் அழகை ரசித்தனர்.நெரிசலால் அவதி: திருமூர்த்தி மலையில், நேற்று அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வாகனங்களில் வந்ததால் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சுற்றுலாப்பயணிகள் அவதிக்குள்ளாகினர்.இந்நிலையில், நெரிசலை தவிர்க்க தற்காலிகமாக அணையில் நடப்பட்டிருந்த கற்கள் அகற்றப்பட்டு, அணைக்குள் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டதால், ஓரளவிற்கு நெரிசல் தவிர்க்கப்பட்டது. தடையை மீறிய சுற்றுலாப்பயணிகள்: அணைப்பகுதியில், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், குளிக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், அணையில் குளிக்க கூடாது என எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நேற்று அதிகளவு குவிந்த சுற்றுலாப்பயணிகள் ஆர்வமிகுதியில் ஆபத்தை உணராமல் அணையில் இறங்கி குளித்தனர். அதிகாரிகள் யாரும் இல்லாததால், அணையின் ஆழமான பகுதிவரை சென்று குளித்த சுற்றுலாப்பயணிகள் தங்களது குழந்தைகளையும் குளிக்க வைத்தனர். தற்போது கோடைக்காலம் என்பதால், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் அணையில் குளிக்க கூடாது என அறிவுறுத்துவதுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபட ஆட்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
(தகவல்: தினமலர்)

No comments:

Post a Comment

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....