Saturday 14 May 2011

உடுமலையை கைப்பற்றினார் பொள்ளாச்சி ஜெயராமன்

உடுமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், 44 ஆயிரத்து 560 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உடுமலை சட்டசபை தொகுதியில், 98 ஆயிரத்து 233 ஆண்கள்; 97 ஆயிரத்து 959 பெண்கள் என ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 192 வாக்காளர்கள் உள்ளனர்.

சண்முகவேலு வெற்றி பெற்றார்

திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., – தி.மு.க., செயலாளர்கள் நேரடியாக தேர்தலில் மோதிய மடத்துக்குளம் தொகுதியில், அமைச்சர் சாமிநாதனை விட, 19,669 ஓட்டுகளை கூடுதலாக பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு வெற்றி பெற்றார்.மடத்துக்குளம் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் சாமிநாதன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகவேலு நேரடியாக போட்டியிட்டனர். 

Monday 2 May 2011

மே தினம் முன்னிட்டு திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருமூர்த்திமலையில், மே தினம் மற்றும் விடுமுறை நாளை கொண்டாட நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஆர்வ மிகுதியில் பயணிகள் அணைப்பகுதியில் இறங்கி குடும்பத்துடன் குளித்தனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. நேற்று மே தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்தனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்குரிய அடிப்படை தகுதிகள் ஒன்றும் இல்லை!

பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ள உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.உடுமலையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், தினமும் 15 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் உள்ளதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய அமைப்பு இல்லாமல், ஒரே நீளமாக குறுகியதாக உள்ளதோடு, பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் என ஐந்து வழிகள் அமைந்துள்ளன.

Friday 29 April 2011

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வாணவேடிக்கை ஒளி,ஒலி வடிவில்


உடுமலை தேர்த்திருவிழா

உடுமலையில்  மிகவும்  பிரசித்தி  பெற்ற அருள் மிகு மாரியம்மன் திருக்கோயிலின், தேர்த்திருவிழாவின் முக்கிய கட்டமான  திருததேரோட்டம் 21.4.2011 வியாழக்கிழமை  மாலை 4  மணிக்கு துவங்கியது. கோயிலின் செயல் அலுவலர் இரா.சங்கர சுந்தரேசுவரன் ம்ற்றும்  மண்டகப்படிதாரர்கள் ,கட்டளைதாரர்கள் உபயதாரர்கள்,  முன்னிலையில்  கோயிலின் பரம்பரை  அறங்காவலர் திருமிகு  யு.எஸ்.எஸ்.  ஸ்ரீதர் அவர்கள்  தேர் வடம் பிடித்து துவக்கி  வைத்தார்கள். ஊர்ப் பொதுமக்களும் வெளி ஊர்களில்  இருந்து வந்திருந்த மக்களும்  தேரை, பக்திப்பரவசத்துடன் இழுத்தனர்.

Tuesday 19 April 2011

ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி

 
உடுமலை அருள்மிகு காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி (17.04.11) மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். நிகழ்ச்சியை ஒட்டி மதியம் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இரவு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.







"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....