Saturday 14 May 2011

சண்முகவேலு வெற்றி பெற்றார்

திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., – தி.மு.க., செயலாளர்கள் நேரடியாக தேர்தலில் மோதிய மடத்துக்குளம் தொகுதியில், அமைச்சர் சாமிநாதனை விட, 19,669 ஓட்டுகளை கூடுதலாக பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு வெற்றி பெற்றார்.மடத்துக்குளம் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் சாமிநாதன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகவேலு நேரடியாக போட்டியிட்டனர். 
74,082 ஆண்கள், 69,138 பெண்கள் என 1,76,353 வாக்காளர்களை கொண்ட இத்தொகுதியில், 216 ஓட்டுச்சாவடிகளில் 1,43,703 ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை மையத்தில், தேர்தல் பார்வையாளர் டெபாஷியஸ் பண்ட்யோத் பாய் தலைமையில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு 78,622 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் சாமிநாதன் 58,953 ஓட்டுகளும் பெற்றனர். 19,669 ஓட்டுகள் கூடுதலாக பெற்ற சண்முகவேல், வெற்றி பெற்றார். சுயே., வேட்பாளர் வரதராஜன் 1,742 ஓட்டுகள்; பா.ஜ., வேட்பாளர் விஜயராகவன் 1,166 ஓட்டுகள் பெற்றனர். சுயே., வேட்பாளர்கள் நந்தகுமார் 946; சடையப்பன் 739; பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 598; சுயே., வேட்பாளர் சாமிநாதன் 218; சுப்ரமணியம், தங்கவேல் இருவரும் தலா 289 ஓட்டுகள் பெற்றனர்; கந்தசாமி 141 ஓட்டுகள் பெற்றார்.ஓட்டு எண்ணிக்கை மந்தம்: துவக்கம் முதலே மடத்துக்குளம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மந்த நிலை நீடித்தது; மற்ற மையங்களில் சுறுசுறுப்பாக சுற்றுகள் சென்ற நிலையில், இம்மையத்தில் மட்டும் மணிக்கணக்கில் தாமதித்து சுற்று முடிவை அறிவிப்பதில், அலுவலர்கள் சுணக்கம் காட்டினர்.

இதனால், கட்சி ஏஜன்டுகளும், பத்திரிகையாளர்களும் அதிருப்தி அடைந்தனர். எண்ணிக்கை முடிந்து, இரண்டு மணி நேரத்துக்கு பின்பே வேட்பாளர் பெற்ற மொத்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டதால், மாலை 4.00 மணிக்கு முடிய வேண்டிய மடத்துக்குளம் தொகுதி தேர்தல் முடிவு, இரவு 7.30 மணி வரை நீடித்தது.போலீசார் கவனம்: இரு கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மோதிய தொகுதி என்பதால், ஓட்டு எண்ணிக்கையின்போது போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். எவ்வித சலசலப்பும் ஏற்படாதபடி கவனமாக கண்காணித்தனர். தி.மு.க., தரப்பில் துவக்கத்தில் இருந்தே இறங்குமுகமாக தெரிந்ததால் கட்சி ஏஜன்டுகள் சோகத்துடன் எண்ணிக்கையை பார்த்து குறிப்பெடுத்தனர்.

No comments:

Post a Comment

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....