Friday 29 April 2011

உடுமலை தேர்த்திருவிழா

உடுமலையில்  மிகவும்  பிரசித்தி  பெற்ற அருள் மிகு மாரியம்மன் திருக்கோயிலின், தேர்த்திருவிழாவின் முக்கிய கட்டமான  திருததேரோட்டம் 21.4.2011 வியாழக்கிழமை  மாலை 4  மணிக்கு துவங்கியது. கோயிலின் செயல் அலுவலர் இரா.சங்கர சுந்தரேசுவரன் ம்ற்றும்  மண்டகப்படிதாரர்கள் ,கட்டளைதாரர்கள் உபயதாரர்கள்,  முன்னிலையில்  கோயிலின் பரம்பரை  அறங்காவலர் திருமிகு  யு.எஸ்.எஸ்.  ஸ்ரீதர் அவர்கள்  தேர் வடம் பிடித்து துவக்கி  வைத்தார்கள். ஊர்ப் பொதுமக்களும் வெளி ஊர்களில்  இருந்து வந்திருந்த மக்களும்  தேரை, பக்திப்பரவசத்துடன் இழுத்தனர்.
பெரிய  யானை,  தேரின் பின்னே  கம்பீரமாக நடை போட்டுச் சென்ற்து. தேரோட்ட்ம் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். நகரெங்கும் ஒரே கூட்டமயம்.கடைகளின் முன்பாகவும் கட்டடங்களின்  மேலும்,  மக்கள் திரண்டிருந்தனர் பத்திரிகை யாள்ர்கள்  புகைப்படமும்  ஒளிப்படமும்  எடுத்தனர்.இளைஞர்கள் கூட்ட்ம். ஆட்டம்  பாட்டம் கொண்டாடடம்.  பலூன, பீப்பீ, குழந்தைகள்  விளையாட்டுப் பொருள்கள், அழகு சாதனப்பொருள்கள், பிளாஸ்டிக்  பொருள்கள், மின் சாதனப்பொருள்கள் எனப் பல நூறு கடைகள் பிரமிக்க,வைத்தன. குட்டை திடலில்  குட்டீஸ்  முத்ல் பெரியவர்கள்  வரை  தூரிகள் பல இருந்தன. சிற்றுண்டிக் கடைகளூம்  ஏராளம். பழ்னி  பாதை,தளி  பாதை,குட்டை திடல், தலை கொண்டம்மன்  கோவில், கொல்லம்பட்டறை  வழியாக  மாலை  6  மணிக்கு தேர்  நிலையை அடைந்தது. காவல்  துறையினரும்,   போக்குவரத்து வர்ர்ட்ன்களூம்,  ஹோம் கார்டுகளும், தீ அணைப்புத்துறையினரும்  நல்ல்  பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருத்தனர். விழா இனிதே நடைப்பெற்றது.





















No comments:

Post a Comment

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....